உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மணல் கடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

மணல் கடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

'கரூர்: '' மணல் கடத்துபவர்கள் மீது, காவல் துறை சட்டப்படியான நடவடிக்கை எடுக்கும்,'' என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்.கரூர் மாவட்டத்தில் காவிரியாறு மற்றும் அமராவதி ஆற்றுப்பகுதிகளில், சட்ட விரோதமாக இரவு நேரங்களில் லாரிகள், மாட்டு வண்டிகள் மற்றும் டூவீலர்களில் மணல் கடத்தப்படுகிறது என, பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தரப்பில் புகார் எழுந்தது. இந்நிலையில் நேற்று, கரூர் அருகே செவிந்திப்பாளையம் காவிரியாற்று பகுதியில், கலெக்டர் தங்கவேல் நேற்று ஆய்வு செய்தார். பிறகு, அவர் கூறியதாவது:கரூர் மாவட்டத்தில் மணல் கடத்தல் நடைபெறும் பகுதிகளில், 10 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு, வருவாய் துறை அலுவலர்கள், காவல் துறையினர், 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, செவிந்திப்பாளையம் காவிரியாற்று பகுதிகளில், மணல் கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது, சட்டப்படி காவல் துறையினர் மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு கூறினார்.கரூர் ஆர்.டி.ஓ., முகமது பைசல் உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி