உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / விநாயகர் சதுர்த்திக்காக சிலைகள் தயார் செய்யும் பணி விறுவிறு

விநாயகர் சதுர்த்திக்காக சிலைகள் தயார் செய்யும் பணி விறுவிறு

விநாயகர் சதுர்த்திக்காக சிலைகள் தயார் செய்யும் பணி விறுவிறுகரூர், ஆக. 21-ஹிந்து முன்னணி சார்பில், விநாயகர் சதுர்த்தி விழாவுக்காக, சிலைகள் தயாரிக்கும் பணி, கரூர் அருகே விறுவிறுப்பாக தொடங்கியுள்ளது.ஆண்டுதோறும் ஆவணி மாதம் சதுர்த்தி நட்சத்திரத்தில், விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. அப்போது, நாடு முழுவதும் ஹிந்து அமைப்புகள் சார்பில், விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, பூஜை நடத்தி, மூன்றாம் நாள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, நீர் நிலைகளில் கரைக்கப்படும். அதற்காக, ஐந்து அடி முதல், 15 அடி வரை விநாயகர்கள் சிலைகள் தயாரிக்கும் பணி, ஒரு மாதத்துக்கு முன்பே துவங்கி விடும். நடப்பாண்டு விநாயகர் சதுர்த்தி நாளான வரும் செப்., 9ல் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை, பிரதிஷ்டை செய்ய ஹிந்து முன்னணி உள்ளிட்ட, பல்வேறு அமைப்புகள் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். அதற்காக, கரூர் அருகே வேலாயுதம்பாளையத்தில் ஹிந்து முன்னணி சார்பில், 200க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் தயார் செய்யும் பணி விறு விறுப்பாக நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை