உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சுதந்திர தின விழாவை முன்னிட்டு 157 பஞ்.,களில் கிராம சபை கூட்டம்

சுதந்திர தின விழாவை முன்னிட்டு 157 பஞ்.,களில் கிராம சபை கூட்டம்

கரூர் கரூர் மாவட்டத்தில் உள்ள, 157 பஞ்சாயத்துகளில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடந்தது. தான்தோன்றி ஊராட்சி ஒன்றியம், மணவாடி மருதம்பட்டி காலனி மாரியம்மன் கோவில் வளாகத்தில் கிராம சபை கூட்டம் நடந்தது. பஞ்., தலைவர் கந்தசாமி தலைமை வகித்தார். இதில் பங்கேற்ற கலெக்டர் தங்கவேல் பேசுகையில், '' ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசு பள்ளிகளில் பயின்று, உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு புதுமைப் பெண் திட்டத்தில் மாதம், 1,000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. தமிழ் புதல்வன் திட்டத்தில் மாணவர்களுக்கு, 1,000 ரூபாய் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அதை பயன்படுத்தி பெற்றோர் தங்கள் குழந்தைகளை உயர்கல்வி பயில வைக்க வேண்டும்,'' என்றார்.கூட்டத்தில், ஊராட்சிகளின் உதவி இயக்குனர் சரவணன், சப்-கலெக்டர் பிரகாசம், கரூர் ஆர்.டி.ஓ., முகமது பைசல், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் இளங்கோ, தான்தோன்றிமலை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஹேமாவதி, வினோத்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.* குளித்தலை அடுத்த, பொய்யாமணி அக்ரஹாரம் தெருவில் கிராம சபை கூட்டம் நடந்தது. பொய்யாமணி பஞ்., தலைவர் பாலன் தலைமை வகித்தார். இதேபோல், பஞ்., தலைவர்கள் நல்லுார் கலா, இனுங்கூர் செந்தில்குமார், இரணியமங்கலம் ரம்யா, சத்தியமங்கலம் பாப்பாத்தி, ராஜேந்திரம் ரத்தனவள்ளி, குமாரமங்கலம் மகேந்திரன், கே.பேட்டை தாமரைசெல்வி, வதியம் குணாலன் மற்றும் பஞ்., தலைவர்கள். துணை தலைவர்கள், யூனியன் கவுன்சிலர்கள், அலுவலர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி