உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ஆற்றல் திறன்மிகு வாழ்விடம் குறித்த பயிற்சி பட்டறை முகாம்

ஆற்றல் திறன்மிகு வாழ்விடம் குறித்த பயிற்சி பட்டறை முகாம்

கரூர் : கரூரில், ஆற்றல் திறன்மிகு வாழ்விடங்கள் பயிற்சி பட்டறை நடந்தது.கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்தார். காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பேரிடர்கள் குறித்தும், அதனை எதிர்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் தெரிவிக்கப்பட்டது.உலகளாவிய பசுமை கட்டட விதிமுறைகளை கடைப்பிடிக்கவும், மரபு சார் எரிசக்தி உபயோகத்தை குறைக்கவும், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பயன்பாட்டினை அதிகப்படுத்தவும், கட்டட பொறியாளர்கள் பசுமை கட்டடங்கள் குறித்த தங்கள் சந்தேகங்களையும், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும், வல்லுனர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.டி.ஆர்.ஓ., கண்ணன், தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் உதவி திட்ட இயக்குனர் விவேக் குமார், மாவட்ட வன அலுவலர் சண்முகம், சப்-கலெக்டர் பைசல் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை