உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ரூ.15.67 கோடி பற்றாக்குறை பட்ஜெட் க ரூர் மாநகராட்சியில் தாக்கல்

ரூ.15.67 கோடி பற்றாக்குறை பட்ஜெட் க ரூர் மாநகராட்சியில் தாக்கல்

கரூர்:கரூர் மாநகராட்சி பட்ஜெட்டில், 15.67 கோடி ரூபாய் பற்றாக்குறை என தெரிவிக்கப்பட்டுள்ளது.கரூர் மாநகராட்சி கூட்டரங்கில், கவுன்சிலர்கள் கூட்டம் நடந்தது. மேயர் கவிதா, 2024--25ம் ஆண்டுக்கான வரவு -செலவு திட்ட அறிக்கை தாக்கல் செய்தார். பொது நிதி, குடிநீர் வடிகால் நிதி, ஆரம்ப கல்வி நிதி என, மூன்று தலைப்புகளில் மாநகராட்சி நிர்வாகம் கணக்கு பதிவேடு பராமரிக்கிறது. இவற்றில் பொது நிதியாக, 620.34 கோடி ரூபாய், குடிநீர் வடிகால் நிதியாக, 131 கோடி ரூபாய், ஆரம்ப கல்வி நிதியாக, 7.69 கோடி வருவாய் ஈட்டப்படும் என, பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேநேரம் மொத்த வருவாய், 759.04 கோடி ரூபாய், மொத்த செலவு, 774.71 ரூபாய் என குறிப்பிடப்பட்டுள்ளது. 15.67 கோடி ரூபாய் நிகர பற்றாக்குறை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குடிநீர், சாலை வசதி, பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்துதல், தெருவிளக்குகள் அமைத்தல், குப்பை மேலாண்மை உட்பட பல்வேறு பணிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.இதில், புதிதாக இணைக்கப்பட்ட பாதாள சாக்கடை திட்ட பணிகளுக்கு, 476 கோடி, குடிநீர் அபிவிருத்தி திட்ட பணிகள், 113 கோடி, மத்திய நிதி குழு மானி திட்ட பணிகள், 15 கோடி, உட்கட்டமைப்பு வசதிகள், 10 கோடி என, 670.32 கோடி ரூபாய் பணிகள் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை