உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தோட்டத்தில் வேலை செய்த தொழிலாளி மயங்கி விழுந்து சாவு

தோட்டத்தில் வேலை செய்த தொழிலாளி மயங்கி விழுந்து சாவு

குளித்தலை:குளித்தலை அடுத்த, கே.பேட்டை பகுதியை சேர்ந்தவர் சக்திவேல், 45, கூலி விவசாய தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் காலை, தனது வாழை தோட்டத்தில், தம்பி மலையாளனுடன் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது சக்திவேல் திடீரென மயங்கி விழுந்தார். உடனே அவரை குளித்தலை அரசு மாவட்ட மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.லாலாபேட்டை போலீசார் சடலத்தை கைப்பற்றி, குளித்தலை அரசு மருத்துவமனையில் உள்ள சவக்கிடங்கில் பிரேத பரிசோதனைக்காக உட்படுத்தினர். இது குறித்து அவரது மகன் மருதை அளித்த புகார்படி, லாலாபேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ