உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / 2 வீடுகளின் பூட்டை உடைத்து நகை பணம் திருடிய மர்ம நபர்களுக்கு வலை

2 வீடுகளின் பூட்டை உடைத்து நகை பணம் திருடிய மர்ம நபர்களுக்கு வலை

குளித்தலை, குளித்தலையில் பொறியாளர், பைனான்சியர் வீட்டில் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் பணம், தங்க நகைகளை திருடி சென்றுள்ளனர்.கரூர் மாவட்டம், குளித்தலை, அண்ணாநகர் பிள்ளையார் கோவில் மேற்கு மூன்றாவது குறுக்கு தெருவை சேர்ந்தவர் கட்டட பொறியாளர் ரஞ்சித்குமார், 40. தனது குடும்பத்துடன் வாடகை வீட்டில் வசிக்கிறார். இவரது மனைவி சஞ்சனா பிரசவத்திற்காக, திருச்சி வரகூரில் உள்ள தனது தாயார் வீட்டில் கடந்த 2 மாதங்களாக இருந்து வருகிறார். கடந்த, 29ல் தனது நண்பர் திருமண நிகழ்ச்சிக்காக சென்றிருந்தார். நேற்று மதியம் தனது வீட்டிற்கு வந்து பார்த்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த அரை கிலோ வெள்ளி, 5 கிராம் தங்கம் திருட்டு போனது தெரியவந்தது.*இதே போல் ஐந்தாவது குறுக்கு தெருவில் வசித்து வரும் பைனான்சியர் பிரமேந்திரன், 75, தனது அண்ணன் வீடான வயலுாருக்கு கடந்த, 29ல் தனது குடும்பத்துடன் சென்றிருந்தார். நேற்று மதியம் வீட்டுக்கு வந்தபோது, முன் பக்க கதவை உடைத்து, பீரோவில் இருந்த இரண்ரை பவுன் நெக்லஸ் ஒன்று, இரண்டு கிராம் தங்க காசு ஒன்று, அரை பவுன் தோடு மற்றும் வெள்ளி பொருட்கள், 12 ஆயிரம் ரூபாய் ரொக் கம் திருட்டு போனது தெரியவந்தது.கரூர் தடவியல் நிபுணர்கள், சோதனை செய்து தடயங்களை பதிவு செய்தனர். இதேபோல் கடந்த கடந்த நவ., 17ல் அதே பகுதியில் வசித்து வரும் விவசாயி ஸ்ரீதருக்கு சொந்தமான யமஹா பைக்கை, மூன்று வாலிபர்கள் திருடி சென்றது, சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதுவரை மூன்று பேரும் சிக்கவில்லை.குளித்தலை அண்ணா நகரில், ஒரே இரவில் இரண்டு வீடுகளில் தங்க நகை, பணம் திருடப்பட்டது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்