உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வீட்டு மனை அளவீடு செய்ய மறுப்பு முதியவர் நடத்திய முற்றுகை போராட்டம்

வீட்டு மனை அளவீடு செய்ய மறுப்பு முதியவர் நடத்திய முற்றுகை போராட்டம்

குளித்தலை: குளித்தலையில், வீட்டு மனை அளவீடு செய்வதற்காக, முறையாக பணம் செலுத்தியும், எட்டு மாதங்களாக நிலத்தை அளக்காமல் இழுத்தடிப்பு செய்து, லஞ்சம் கேட்ட நில அளவையர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, குளித்தலை தாசில்தார் அலுவலகம் முன் முதியவர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டார்.குளித்தலை அடுத்த, மேல சுக்காம்பட்டியை சேர்ந்தவர் விவசாய கூலித் தொழிலாளி முதியவர் அர்ஜூனன், 70. இவர், நத்தம் கூட்டு பட்டாவில் உள்ள தனது வீட்டின் இடத்தை உட்பிரிவு செய்து, தனக்குரிய வீட்டுமனையை அளந்து, தனிப்பட்டா வழங்குமாறு கடந்தாண்டு டிசம்பரில் ஆன்லைன் மூலம் பணம் கட்டியுள்ளார். ஆனால், நில அளவையரான பார்த்திபன் நிலத்தை அளவீடு செய்ய முன்வரவில்லை.இந்நிலையில், நில அளவையர் பார்த்திபன் மீது, சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நேற்று காலை, 11:30 மணியளவில் ஜமாபந்தி கடைசி நாளில், அர்ஜூனன் நிலத்தை அளவீடு செய்ய மறுக்கும் பார்த்திபனை கண்டித்து, போராட்டத்தில் ஈடுபடுவதாக கூறி கழுத்தில் பதாகையை அணிந்தபடி, தாசில்தார் அலுவலக நுழைவாயில் முன் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டார்.இதையடுத்து அர்ஜூனனிடம், தாசில்தார் சுரேஷ் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது முதியவர்,' பேச்சுவார்த்தை நடந்து பல மாதங்களாகியும், நில அளவையர் பார்த்திபன் இடத்தை அளவீடு செய்யவில்லை. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார். உங்கள் இடத்தை நாளைக்குள், (இன்று) நில அளவையர் பார்த்திபன் அளந்து தருவார் என தாசில்தார் உறுதியளித்ததை தொடர்ந்து, முதியவர் போராட்டத்தை கைவிட்டார். இதனால் தாசில்தார் அலுவலகத்தில், ஒரு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை