உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அக்கு பிரஷர் மருத்துவ முகாம்

அக்கு பிரஷர் மருத்துவ முகாம்

நாமக்கல், கொங்கு நாட்டு வேளாளார் சங்கம், கொங்கு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் சேலம் ஆர்.கே.எம்., அக்கு பிரஷர் கிளினிக், பயிற்சி மையம் சார்பில், இலவச அக்குபிரஷர் சிறப்பு மருத்துவ முகாம், நாமக்கல்லில் நேற்று நடந்தது.கொங்கு நாட்டு வேளாளர் சங்க தலைவர் வெங்கடாசலம் தலைமை வகித்தார். முகாமில், சீன அக்கு பஞ்சர், அக்கு பிரஷர் முறையில், பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. டாக்டர் குமாரசாமி தலைமையிலான மருத்துவர் குழுவினர், இருதயம், நுரையீரல், முதுகு வலி, கழுத்து வலி, மூட்டு வலி, சிறுநீரக கோளாறுகள், பித்தப்பை கற்கள், சர்க்கரை நோய், துாக்கம் இன்மை, தோல் சம்பந்தப்பட்ட பிரச்னைகள், மாணவர்களின் ஞாபகத்திறனை மேம்படுத்த சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டது.மருந்தில்லா மருத்துவத்தை ஊக்குவிக்க நடந்த முகாமில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவியர் என, 200க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை