உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகிகள் கூட்டம்

விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகிகள் கூட்டம்

கரூர், தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க, கரூர் மாவட்ட கிளை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், மாவட்ட தலைவர் பாலன் தலைமையில் நேற்று நடந்தது.அதில், 100 நாள் வேலை திட்டத்தில் வேலை கேட்கும், அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும். தொழிலாளர்களை போட்டோ எடுக்கும் திட்டத்தை கைவிட்டு, கையெழுத்து பெற்றுக்கொண்டு வேலை வழங்க வேண்டும், 100 நாள் வேலையை, 200 நாளாக உயர்த்த வேண்டும். அரசு அறிவித்துள்ள, 336 ரூபாயை ஊதியமாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.தேசிய நிர்வாக குழு உறுப்பினர் கணேசன், இ.கம்யூ., கட்சி மாவட்ட செயலாளர் கலாராணி, நிர்வாகிகள் தங்கவேல், ஆண்டியப்பன், தங்கராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை