உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ராகவேந்திரர் ஸ்வாமி கோவிலில் ஆராதனை மஹோத்ஸவ விழா

ராகவேந்திரர் ஸ்வாமி கோவிலில் ஆராதனை மஹோத்ஸவ விழா

கரூர்: ராகவேந்திரர் ஸ்வாமியின் ஆராதனை விழா நேற்று நிறைவடைந்தது.கரூர், ராகவேந்திரர் சுவாமிகள் கோவிலில், 353வது ஆராதனை மஹோத்ஸவ விழா கடந்த, 20ல் துவங்கியது. நேற்று முன்தினம் பஞ்சாமிர்த அபிஷேகம், ராம நாம ஜெபம், சஹஸ்ர நாம அர்ச்சனை நடந்தது. நேற்று, மங்கள இசையுடன் வைபவம் துவங்கியது. பால், தயிர், தேன், நெய், சந்தனம், மஞ்சள், குங்குமம் ஆகிய திரவியங்களால் ராகவேந்திரருக்கு திருமஞ்சனம் செய்யப்பட்டது. அதன் பின் அலங்கார பூஜையும், மலர் அர்ச்சனை, மங்கள ஆரத்தி ஆகியவை நடந்தன. பூஜையில் பங்கேற்ற பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு, 7.00 மணிக்கு பக்தி இசை நிகழ்ச்சி நடந்தது. ஏராளமானோர் ராகவேந்திரரை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை