உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பூத் சிலிப் வழங்கும் பணி: தேர்தல் அலுவலர் ஆய்வு

பூத் சிலிப் வழங்கும் பணி: தேர்தல் அலுவலர் ஆய்வு

கரூர்: கரூர் மாவட்டத்தில், பல்வேறு பகுதிகளில் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கப்பட்டு வரும் பணியை, வீடு வீடாக சென்று மாவட்ட தேர்தல் அலுவலர் தங்கவேல், நேரில் ஆய்வு மேற்கொண்டார்.அப்போது, அவர் கூறியதாவது:கரூர் லோக்சபா தொகுதியில், 14.22 லட்சம் வாக்காளர்கள் ஓட்டளிக்க உள்ளனர். ஓட்டுப்பதிவு நாளன்று தங்கள் ஓட்டை எவ்வித சிரமமுமின்றி, ஓட்டுச்சாவடிகளில் சென்று ஓட்டளிக்க ஏதுவாக பூத் சிலிப் அனைத்து வாக்காளர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், அந்தந்த ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் வீடு வீடாக சென்று வாக்காளர்களுக்கு சீட்டு வழங்கும் பணி ஏப்.,13க்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.மேலும். பூத் சிலிப்புடன் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் இந்திய தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் கையேடு வழங்கப்படுகிறது. பூத் சிலிப்புகள் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் மட்டுமே வாக்காளர்களிடம் வழங்கப்பட வேண்டும். வேறு நபர்களோ அல்லது அரசியல் கட்சி சார்ந்த நபர்கள் மூலமாகவோ பூத் சிலிப்புகள் வழங்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ