மேலும் செய்திகள்
எல்.பி.ஜி., ஆட்டோக்கள் பதிவு சுலபமாக்கப்படுமா?
26-Aug-2025
கரூர்:கரூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவள்ளுவர் மைதானத்தில் ஆட்டோக்களை நிறுத்தி, டிரைவர்கள் நேற்று ஸ்டிரைக் நடத்த திட்டமிட்டனர்.கரூர் மாநகராட்சி பகுதியில், 350க்கும் மேற்பட்ட ஆட்-டோக்கள் இயங்கி வருகின்றன. இந்நிலையில், ராபிடோ டூவீலர் சவாரி, கால் டாக்ஸி, ஷேர் ஆட்டோக்கள் வருகையால், தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி, நேற்று காலை, 11:30 மணிக்கு, 50க்கும் மேற்பட்ட ஆட்டோக்களை, திருவள்ளுவர் மைதானத்தில் நிறுத்தி, டிரைவர்கள் ஸ்டிரைக் நடத்த திட்டமிட்-டனர். இதுகுறித்து, கரூர் டவுன் போலீஸ் எஸ்.ஐ.,க்கள் ராஜசேகரன், மாரிமுத்து உள்ளிட்ட போலீசார் திருவள்ளுவர் மைதானத்துக்கு வந்தனர். பின், மாநகராட்சி கமிஷனர் அனுமதி இல்லாமல், ஆட்-டோக்களை திருவள்ளுவர் மைதானத்தில் நிறுத்த கூடாது. ஆட்-டோக்களை ஓட்டி செல்லுங்குள் என, டிரைவர்களிடம் போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து, ஸ்டிரைக் முடிவை கைவிட்டு, ஆட்-டோக்களை டிரைவர்கள் ஓட்டி செல்ல முடிவு செய்தனர்.அப்போது, ஆட்டோ டிரைவர்கள் கூறியதாவது: கரூர் மாவட்-டத்தில் டூவீலர் சவாரி, ஷேர் ஆட்டோ, கால் டாக்ஸி ஆகியவை, போட்டி போட்டுக்கொண்டு குறைந்த கட்டணத்தில் இயக்கி வரு-கின்றனர். மேலும், மினி பஸ்கள் பர்மிட் இல்லாமல், 15 கிலோ மீட்டருக்கு மேலாக இயக்குகின்றனர். இதனால், ஆட்டோ ஓட்டும் எங்களின் வாழ்வாதரம் பாதிக்கப்படுகிறது. இதனால், அரசியல் சார்பற்று, இன்று (நேற்று) சிறிது நேரம் ஸ்டிரைக் செய்து, திருவள்ளுவர் மைதானத்தில் ஆலோசனை நடத்த முடிவு செய்தோம். அதற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இதனால், கோரிக்கைகளை வலியுறுத்தி, மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்க திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
26-Aug-2025