உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் இயற்கை வளம் குறித்து விழிப்புணர்வு

குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் இயற்கை வளம் குறித்து விழிப்புணர்வு

குளித்தலை:குளித்தலை அடுத்த கழுகூரில் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில், பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக, நேற்று பனை விதை நடவு மற்றும் அதன் தன்மைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கழுகூர் குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் தலைமை வகித்தனர்.இதில், குளித்தலை - மணப்பாறை மெயின் ரோடு, கழுகூர் பிரிவு ரோடு, கழுகூர் பெரிய ஏரிக்கரை உள்ளிட்ட பகுதிகளில், பனை விதைகளை நடவு செய்தனர். பின், பனை மரம் வளர்ப்பதால் ஏற்படும் நன்மைகள், மரங்களின் தன்மைகள், இயற்கையோடு கூடிய சுற்றுச்சூழல்களை எப்படி பாதுகாப்பது போன்ற விழிப்புணர்வை ஏற்படுத்தினர். கழுகூர் குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள், குழந்தைகள், பள்ளி, கல்லுாரி மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை