உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அய்யர்மலை ரோப் கார் பழுது: 12 பேர் கொண்ட குழு ஆய்வு

அய்யர்மலை ரோப் கார் பழுது: 12 பேர் கொண்ட குழு ஆய்வு

குளித்தலை: குளித்தலை அருகே, அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவிலில் கடந்த, 24ம் தேதி ரோப்கார் சேவை தொடங்கப்பட்டது, மறுநாள் அதிகளவு காற்று வீசியதால் பழுது ஏற்பட்டு, இரண்டு மணி நேரம் பக்தர்கள் அவதிப்பட்டனர். இது குறித்து வல்லுனர் குழு ஆய்வு செய்து, தமிழக அரசுக்கு அறிக்கை தர வலியுறுத்தப்பட்-டுள்ளது.கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த அய்யர்மலை ரத்தினகிரீஸ்-வரர் கோவிலில் கடந்த, 24ல், ரூ.9.10 கோடி மதிப்பில் ரோப்கார் சேவையை முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார். மறுநாள் பக்தர்கள் ரோப் காரில் மலையேறி சுவாமி தரிசனம் செய்தனர், மதியம், 2:30 மணியளவில் மலையில் இருந்து தரிசனம் முடித்துவிட்டு, நான்கு பெட்டிகளில், எட்டு பேர் கீழே இறங்கி வரும்போது, அதிகளவு காற்று வீசியதால் ரோப் கார் சக்கரத்தின் கம்பி தடம் புரண்டது. இதனால் பயணம் செய்த எட்டு பேர், ஏணி மூலம் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.சுவாமி தரிசனம் செய்வதற்காக மலைக்கு சென்ற, திருச்சி மாவட்-டத்தை சேர்ந்த மூன்று பெண்கள் அந்தரத்தில் பரிதவித்தனர். ரோப் கார் மற்றும் கோவில் பணியாளர்கள், இரண்டு மணி நேரம் போராடி பழுது சரி செய்யப்பட்டு, அந்தரத்தில் இருந்த மூன்று பெண்களை, பத்திரமாக மேலே இறக்கி விடப்பட்டனர். பின் அவர்கள், படிக்கட்டுகள் வழியாக கீழே இறங்கினர். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை, 10:30 மணியளவில் ஹிந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகள் தலைமையில், கண்காணிப்பு பொறியாளர் கிருஷ்ணசாமி, பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் மணிகண்டன், இந்திய தொழில் நுட்பக் கழக பேராசிரியர் சுந்தரராஜன், சென்னை அண்ணா பல்கலை பேராசிரியர் சண்முகசுந்தரம், சென்னை தரமணி கட்டுமான ஆராய்ச்சி மையம் பேராசிரியர் மற்றும் இயக்குனருமான பழனி, பழநி தண்டாயுத-பாணி சுவாமி கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, கோவை ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி பொறியாளர் தியாகராஜன், நாமக்கல் மின் ஆய்வாளர் பழனிசாமி, பழநி தண்டாயுதபாணி கோவில் செயற்பொறியாளர் நாச்சிமுத்து, பொறியாளர் பார்த்-திபன், சேப்பாக்கம் பொதுப்பணித்துறை திட்ட கண்காணிப்பு பொறியாளர் மணிவண்ணன் உள்ளிட்ட, 12 பேர் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த குழுவினர், ரோப் கார் கட்டுப்-பாட்டு அறையில் உள்ள, சிசிடிவி கேமராவில் பதிவான காட்சி-களை ஆய்வு செய்தனர். தொடர்ந்து, வல்லுனர் குழு ரோப் காரில் பயணம் செய்து ஆய்வு மேற்கொண்டனர். பின்னர், ரோப்கார் பழுதுக்கான ஆய்வு குறித்து ஆலோசனை செய்தனர். திருப்பூர் ஹிந்து சமய அறநிலைத்துறை மண்டல இணை ஆணையர் கும-ரத்துரை. ரோப் கார் திட்ட செயல் அலுவலர் அமர்நாதன், அய்யர்-மலை ரத்தினகிரீஸ்வரர் கோவில் செயல் அலுவலர் தங்கராசு ஆகியோர் உடனிருந்தனர்.இதுகுறித்து, வல்லுனர் குழுவினர் கூறுகையில்,' ரோப்கார் பழுது குறித்து, முதல்வர் மற்றும் துறை அமைச்சர் ஆகியோருக்கு அறிக்-கையாக தரப்படும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ