பவானிசாகர் நீர்மட்டம் 102 அடியில் நீடிப்பு
பவானிசாகர், நீர்ப்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப்பகுதியில் தீவிரமடைந்த மழையால், பவானிசாகர் அணை நீர்வரத்து கிடுகிடுவென உயர்ந்தது. கடந்த, 19ம் தேதி, 102 அடியை எட்டிய நிலையில், உபரி நீர் பவானி ஆற்றில் திறக்கப்பட்டது. நான்காவது நாளாக நேற்றும், 102 அடியில் அணை நீர்மட்டம் இருந்தது.அணையிலிருந்து உபரி நீர், 2,600 கன அடி; கீழ்பவானி வாய்க்காலில், 2,300 கன அடி தண்ணீர்; அரக்கன்கோட்டை-தடப்பள்ளி பாசனத்துக்கு, 400 கன அடி என, 5,300 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணைக்கு வரும் தண்ணீரும் வெளியேற்றப்படும் நீரும் ஒரே அளவில் இருப்பதால் அணை நீர்மட்டம் தொடர்ந்து நான்கு நாட்களாக, 102 அடியில் நீடிக்கிறது.