உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பா.ஜ., வேட்பாளர் கூட்டணி; கட்சி நிர்வாகிகளுடன் சந்திப்பு

பா.ஜ., வேட்பாளர் கூட்டணி; கட்சி நிர்வாகிகளுடன் சந்திப்பு

கரூர் : கரூர் எம்.பி., தொகுதி, பா.ஜ., வேட்பாளர் செந்தில்நாதன், கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டினார். கரூர், சாமிநாதபுரத்தில் உள்ள மாவட்ட, பா.ம.க., அலுவலகத்தில், மாவட்ட செயலாளர் சுரேஷ் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்து, பா.ஜ., வேட்பாளர் செந்தில் நாதன் ஆதரவு திரட்டினார். அப்போது, முன்னாள் எம்.எல்.ஏ., மலையப்பசாமி, மாவட்ட அமைப்பு செயலாளர் குணசீலன், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் பசுபதி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.* கரூர் ஆண்டாங்கோவிலில் உள்ள முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் அணி அலுவலகத்தில், மாவட்ட செயலாளர் ரமேஷ் உள்ளிட்ட நிர்வாகிகளை சந்தித்து, பா.ஜ., வேட்பாளர் செந்தில்நாதன் சால்வை அணிவித்து ஆதரவு திரட்டினார். அப்போது, மாவட்ட அவைத்தலைவர்கள் கணேசன், அன்பழகன், துணை செயலாளர்கள் ஐயப்பன், ரோஜா, நகர செயலாளர்கள் அன்பழகன், கோபால் உள்பட பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை