உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / எம்.பி.,தேர்தலை புறக்கணித்து கருப்பு கொடி ஆர்ப்பாட்டம்

எம்.பி.,தேர்தலை புறக்கணித்து கருப்பு கொடி ஆர்ப்பாட்டம்

கரூர் : கரூர் அருகே, லோக்சபா தேர்தலை புறக்கணிப்பதாக கூறி, வீடுகளில் கருப்பு கொடி கட்டி, பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.கரூர் மாவட்டம், காதப்பாறை பஞ்சாயத்து, வெண்ணைமலையில், பாலசுப்பிரமணி சுவாமி கோவிலுக்கு சொந்தமான நிலம் உள்ளது. அதில், பல ஆண்டுகளுக்கு முன்பு பொதுமக்கள் நிலத்தை விலைக்கு வாங்கி, வீடு மற்றும் வர்த்தக நிறுவனங்கள் கட்டி பயன்படுத்தி வருகின்றனர். எனவே, கோவிலுக்கு சொந்தமான இடத்தை மீட்க வேண்டும் என, திருத்தொண்டர் சபை நிறுவன தலைவர் ராதாகிருஷ்ணன், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.இதையடுத்து அறநிலையத்துறை சார்பில், வீடு மற்றும் வர்த்தக கட்டட உரிமையாளர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதை கண்டித்து, நேற்று வெண்ணைமலை பகுதியில் உள்ள, 50க்கும் மேற்பட்ட வீடுகளில் கருப்பு கொடி கட்டப்பட்டது. பிறகு, வெண்ணைமலை பஸ் ஸ்டாப்பில் அறநிலையத்துறை அதிகாரிகளை கண்டித்து, முன்னாள் வி.ஏ.ஓ., காமராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.அதில், இனாம் நிலங்களை ஹிந்து சமய அறநிலையத் துறையும், வக்பு வாரியமும் சட்ட விரோதமாக அபகரிக்க முயல்வதை கண்டித்தும், வரும் லோக்சபா தேர்தலை புறக்கணித்தும் கோஷம் எழுப்பப்பட்டது.ஆர்ப்பாட்டத்தில், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், இனாம் நில விவசாயிகள், குத்தகையாளர்கள், வீடு, மனை உரிமையாளர் சங்கத்தினர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை