உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மகனை கத்தியால் குத்திய தந்தை மீது வழக்கு பதிவு

மகனை கத்தியால் குத்திய தந்தை மீது வழக்கு பதிவு

கரூர், வெள்ளியணை அருகே, மகனை கத்தியால் குத்திய தந்தை மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.கரூர் மாவட்டம், வெள்ளியணை அருகே, உப்பிடமங்கலம் லிங்கத்துார் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல், 68; இவர் கடந்த, 19ல் இரவு வீட்டில் குடிபோதையில் இருந்தார். அப்போது, தங்கவேலுவுக்கும், மகன் குணசேகரனுக்கும், 48, இடையே தகராறு ஏற்பட்டது.அதில், ஆத்திரமடைந்த தங்கவேல் கத்தியால், குணசேகரன் தலை மற்றும் தோளில் குத்தினார். படுகாயம் அடைந்த குணசேகரன், திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். குணசேகரன் கொடுத்த புகார்படி வெள்ளியணை போலீசார், தங்கவேல் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை