உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / த.வெ.க., பிரசார கூட்ட வழக்கை கண்காணிக்க சி.பி.ஐ., - டி.ஐ.ஜி., வருகை

த.வெ.க., பிரசார கூட்ட வழக்கை கண்காணிக்க சி.பி.ஐ., - டி.ஐ.ஜி., வருகை

கரூர், த.வெ.க., பிரசார கூட்ட வழக்கை கண்காணிக்க, நேற்று சி.பி.ஐ., டி.ஐ.ஜி., கரூர் வந்தார்.கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்., 27ல், விஜய் பங்கேற்ற த.வெ.க., பிரசார கூட்டத்தில், 41 பேர் நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர்.இது தொடர்பான வழக்கை, உச்சநீதிமன்ற உத்தரவின்படி, சி.பி.ஐ., எஸ்.பி., பிரவீன்குமார் தலைமையில் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். அதற்காக, கரூர் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள, பயணியர் மாளிகையில் சி.பி.ஐ., சிறப்பு அலுவலகம் செயல்படுகிறது. நேற்று காலை, 10:00 மணிக்கு சி.பி.ஐ., டி.ஐ.ஜி., அதுல்குமார் தாகூர், கரூரில் செயல்பட்டு வரும் சி.பி.ஐ., அலுவலகத்துக்கு வந்தார். அவரை அதிகாரிகள் வரவேற்று, அலுவலகத்துக்குள் அழைத்து சென்றனர்.பிறகு, த.வெ.க., பிரசார கூட்டம் தொடர்பாக இதுவரை நடத்திய விசாரணை குறித்து, டி.ஐ.ஜி., அதுல்குமார் தாகூர், அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.பிறகு கரூர்-ஈரோடு சாலையில், த.வெ.க., பிரசார கூட்டம் நடந்த இடத்தை, டி.ஐ.ஜி., அதுல்குமார் தாகூர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ