உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கோ- - ஆப்டெக்ஸில் தீபாவளி விற்பனை இலக்கு ரூ.60 லட்சம்

கோ- - ஆப்டெக்ஸில் தீபாவளி விற்பனை இலக்கு ரூ.60 லட்சம்

கரூர், கரூர் கோ--ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில், தீபாவளி பண்டிகைக்கு, 60 லட்சம் ரூபாய் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.கரூர் கோ--ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை, நேற்று கலெக்டர் தங்கவேல் தொடங்கி வைத்தார். பின் அவர், கூறியதாவது:இந்தாண்டு தீபாவளியை முன்னிட்டு, பல்வேறு வடிவமைப்புகளில், அசல் ஜரிகையுடன் கூடிய காஞ்சிபுரம் பட்டு புடவைகள், ஆரணி பட்டு புடவைகள், சேலம், தஞ்சாவூர் பட்டு புடவைகள் மற்றும் கோவை மென்பட்டு புடவைகள் ஏராளமாக குவிந்துள்ளன. மேலும் கோவை, மதுரை, திண்டுக்கல், பரமக்குடி, திருச்சி மற்றும் சேலம் பகுதிகளில் தயாராகும் அனைத்து ரக பருத்தி புடவைகள் புதிய வடிவமைப்பிலும், களம்காரி பருத்தி புடவைகள் நேர்த்தியான வண்ணங்களிலும் உருவாக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.கோ--ஆப்டெக்ஸ்-ல் படுக்கை விரிப்புகள், அச்சிடப்பட்ட படுக்கை விரிப்புகள், வேட்டிகள், லுங்கிகள், துண்டு கள், ஜமுக்காளம், பருத்தி சட்டை, லினன் சட்டை, அச்சிடப்பட்ட சட்டை மற்றும் சுருக்கம் அடையாத சட்டைகள் ஏராளமாக விற்பனைக்கு வந்துள்ளன. கைத்தறி ரகங்களுக்கு, 30 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. அனைத்து விடுமுறை நாட்களிலும் விற்பனை நிலையம் செயல்படும். கரூர் மாவட்ட கோ--ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்திற்கு தீபாவளி பண்டிகைக்கு, 60 லட்சம் ரூபாய் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு கூறினார்.மாநகராட்சி கமிஷனர் சுதா, கோ--ஆப்டெக்ஸ் மேலாளர் பாலசுப்ரமணியன், விற்பனை நிலைய மேலாளர் மகேஸ்வரி உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி