உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ரங்கநாத சுவாமி கோவிலில் பகல் பத்து 6ம் நாள் உற்சவம்

ரங்கநாத சுவாமி கோவிலில் பகல் பத்து 6ம் நாள் உற்சவம்

கரூர்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, கரூர் அபயபிரதான ரங்கநாத சுவாமி கோவிலில், திருமொழி திருநாள் எனப்படும் பகல் பத்து உற்சவம் நடக்கிறது. இதில், பகல் பத்து உற்சவம் 6ம் நாளை முன்னிட்டு, நேற்று சுவாமிக்கு பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின், அச்சு அவதார அலங்காரத்தில் காட்சி-யளித்தார். சுவாமி கோவில் வலம் வந்த பிறகு, மீண்டும் கோவில் மண்ட-பத்தில் சுவாமிக்கு தீபாராதனை காட்டப்பட்டது. வரும், 29ல், மோகினியார் அலங்காரம், நாச்சியார் திருக்கோலம் நடக்கிறது. வரும், 30 அதிகாலை 4:00 மணிக்கு மேல், 4:30 மணிக்குள் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி