உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பள்ளம் விழுந்த இடத்தில் பராமரிப்பு பணிகள் தாமதம்: மக்கள் அதிருப்தி

பள்ளம் விழுந்த இடத்தில் பராமரிப்பு பணிகள் தாமதம்: மக்கள் அதிருப்தி

கரூர்: கரூரில், பள்ளம் விழுந்த இடத்தில் பராமரிப்பு பணிகள் தொடங்காமல் உள்ளது. இதனால், கரூர் மாநகராட்சி நிர்வாகம் மீது பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர். கரூர் மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் செயல்பாட்டில் உள்ளது. பல இடங்களில் பாதாள சாக்கடை சிமென்ட் மூடிகள் சேதமடைந்துள்ளன. இந்நிலையில், கடந்த, 7 மாலை கரூர் -வாங்கல் சாலை பழைய நீதிமன்றம் அருகே, பாதாள சாக்கடை குழாயில் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக, மீண்டும் திடீரென பள்ளம் விழுந்தது. இதையடுத்து, பள்ளத்தை சுற்றி போக்குவரத்து போலீசார், வாகனங்கள் செல்ல முடியாத வகையில், தடுப்புகளை வைத்துள்ளனர்.ஆனால், பள்ளம் விழுந்த இடத்தில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளாமல், கரூர் மாநகராட்சி நிர்வாகம் காலம் கடத்தி வருகிறது. இதனால், அந்த வழியாக சென்ற அரசு மற்றும் தனியார் பஸ்கள், கார், வேன் உள்ளிட்ட கனரக வாகனங்கள் மாற்று பாதை வழியாக செல்கிறது. மேலும், கரூர் - வாங்கல் சாலையில் வசிக்கும் பொதுமக்களும் பள்ளம் பெரிதாகி விடுமோ என்ற அச்சத்திலும், மாநகராட்சி நிர்வாகம் மீது அதிருப்தியில் உள்ளனர். எனவே, கரூர் - வாங்கல் சாலையில், பள்ளம் விழுந்த இடத்தில், போர்க்கால அடிப்படையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள, கரூர் மாநகராட்சி நிர்வாகம், நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர் பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை