பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன்
குளித்தலை, குளித்தலை அடுத்த, நங்கவரம் டவுன் பஞ்., வடக்கு மாடு விழுந்தான் பாறையில் காளியம்மன், மாரியம்மன் கோவில்கள் அமைந்துள்ளன. வைகாசி பெருந்திருவிழா இரண்டு நாட்களுக்கு முன், கரகம் பாலித்தலுடன் துவங்கியது.அதனை தொடர்ந்து, நங்கவரம் வாரி கரையிலிருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும், அக்னி சட்டி ஏந்தியும், அலகு குத்தியும் ஊர்வலமாக வந்தனர். பின்னர், குண்டத்தில் இறங்கி தீ மிதித்து தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினர்.மேலும் குழந்தைகளை, பெற்றோர்கள் தோளில் சுமந்து குண்டத்தில் இறங்கி வழிபட்டனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், குண்டம் இறங்கி, அம்மனை வழிபட்டனர்.