உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கணவருடன் சேர்த்து வைக்க கோரி இளம் பெண் தர்ணா போராட்டம்

கணவருடன் சேர்த்து வைக்க கோரி இளம் பெண் தர்ணா போராட்டம்

கரூர் : காதல் திருமணம் செய்து கொண்டு, பிரிந்து சென்ற கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி, இளம் பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.கரூர் மகளிர் போலீஸ் ஸ்டேஷன் முன், நாமக்கல் மாவட்டம், ஓலப்பாளையம் பகுதியை சேர்ந்த ரோசி, 22, என்பவர் கணவருடன் சேர்ந்து வைக்க கோரி, தர்ணா போராட்டத்தில் நேற்று ஈடுபட்டார். அவரிடம் போலீசார் பேச்சுவர்த்தை நடத்தி, ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்தனர். அப்போது, அவர் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:கரூர் அடுத்த வாங்கல் குப்புச்சிபாளையம், ஓடையூரை சேர்ந்த கார்த்தியை, கரூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லுாரியில் படித்துக் கொண்டிருந்தபோது காதலித்தேன். கடந்த ஜன.,7ல் இருவரும் நண்பர்கள் உதவியுடன் திருமணம் செய்து கொண்டோம். திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், பிப்., 7ல் கரூர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் பாதுகாப்பு வேண்டி புகார் மனு அளித்தோம்.பெற்றோர், உறவினர்களை அழைத்து போலீசார் சமரசம் செய்து வைத்தனர். கார்த்தி பெற்றோருக்கு உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் கோவை பி.என் புதுார் பெருமாள் கோவில் பகுதியில் இருவரும் வசித்து வந்தோம். கடந்த, 10-ல் திருச்சியில் உள்ள அக்கா வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற கார்த்தி வீடு திரும்பவில்லை. அவருக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்து வைப்பதற்கான ஏற்பாடு நடந்து வருகிறது. கணவருடன் சேர்ந்து வாழ இடையூறாக இருக்கும், கார்த்தியின் உறவினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி