உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கரூர்: அகில இந்திய வங்கி தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைளை வலியூறுத்தி கரூர் ஸ்டேட் பாங்க ஆப் இந்தியா கிளை முன்பு ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலாளர் வெங்கடேசன் தலைமையில் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் பொதுத்துறை வங்கிகளில் மூலதனத்தை குறைக்க கூடாது, தனியார் துறை வங்கிகளில் அந்நிய மூலதனத்தை அனுமதிக்க கூடாது, வங்கிகளில் உள்ள காலியிடங்களை நிரப்ப வேண்டும். கருணை அடிப்படையில் வேலை, பென்ஷன் திட்டத்தில் முன்னேற்றம் தேவை உள்ளிட்ட பல்வேறு கோஷங்கள் எழுப்பபட்டன. வங்கி அதிகாரிகள் சங்க மாவட்ட செயலாளர் சேகர், எல்.வி.பி., ஊழியர் சங்க தலைவர் ராமமூர்த்தி, மாவட்ட அரசு ஊழியர் சங்க செயலாளர் சுப்ரமணியம், எல்.ஐ.சி., தஞ்சை கோட்ட துணை தலைவர் கணேசன், என்.எப்.பி.இ., மாவட்ட தலைவர் விஸ்வநாதன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை