உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மினி சரக்கு வாகனம் மோதி முதியவர் காயம்

மினி சரக்கு வாகனம் மோதி முதியவர் காயம்

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி அருகே சாம்பாரை புதுார் பகுதியை சேர்ந்தவர் கருப்பண கவுண்டர், 75. இவர் நேற்று பள்ளப்பட்டியில் இருந்து, பழநி செல்லும் சாலையில் டூவீலரில் சென்று கொண்டிருந்தார். இவரது வாகனம் பூலாம்வலசு அருகே சென்றபோது, எதிரே அரவக்குறிச்சி தாலுகா, சேந்தமங்கலம், புதுப்பட்டியை சேர்ந்த ஆனந்தகுமார், 35, என்பவர் வேகமாக ஓட்டி வந்த மினி சரக்கு வாகனம் டூவீலர் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த கருப்பண கவுண்டரை மீட்டு, தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அரவக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி