உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சென்டர் மீடியன் உடைப்பைசரி செய்ய வலியுறுத்தல்

சென்டர் மீடியன் உடைப்பைசரி செய்ய வலியுறுத்தல்

கரூர்;கரூரில் வணிக நிறுவனங்கள், கிளை சிறை, தாலுகா அலுவலகம், தீயணைப்பு துறை அலுவலகம், கிளை மற்றும் வர்த்தக நிறுவனங்கள் அதிகம் உள்ள, ஜவஹர் பஜார் பகுதியில், போக்குவரத்து நெரிசலை சரி செய்ய, சாலையில் சென்டர் மீடியன் அமைக்கப்பட்டுள்ளது. அதில், பல இடங்களில் வாகனங்கள் மோதியதில், உடைப்பு ஏற்பட்டுள்ளது. அதை, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சரி செய்யவில்லை. இதனால், உடைப்பு அதிகமாகி, சுவர் சரியும் நிலை ஏற்பட்டுள்ளது. அதை புதுப்பிக்க வேண்டும் அல்லது பழைய சென்டர் மீடியனை இடித்து விட்டு, புதிதாக கட்ட, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை