உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / நடுநிலைப்பள்ளி மாணவர்கள் சேர்க்கை விழிப்புணர்வு

நடுநிலைப்பள்ளி மாணவர்கள் சேர்க்கை விழிப்புணர்வு

கிருஷ்ணராயபுரம்:குப்புரெட்டிப்பட்டி, அரசு நடுநிலைப்பள்ளி சார்பில் மாணவர்கள் சேர்க்கை விழிப்புணர்வு நடந்தது.கிருஷ்ணராயபுரம் அடுத்த, குப்புரெட்டிப்பட்டி கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்படுகிறது. மாணவர்களுக்கு பள்ளி சார்பில் காலை உணவுத்திட்டம், இதர சலுகைகளை அரசு வழங்கி வருகிறது. தற்போது, பள்ளியில் புதிததாக மாணவர்கள் சேர்க்கை பணி நடத்தப்படுகிறது. அதன்படி பள்ளி சார்பில் குப்புரெட்டிப்பட்டி கிராமத்தில் உள்ள தெருக்களில் வசிக்கும் மக்களிடம், அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை குறித்தும், அதன் மூலம் மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி தரம் பற்றியும் எடுத்து கூறப்பட்டது. சேர்க்கை விழிப்புணர்வு பணியில் ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை