உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கிருஷ்ணராயபுரத்தில் மழை மகிழ்ச்சியில் விவசாயிகள்

கிருஷ்ணராயபுரத்தில் மழை மகிழ்ச்சியில் விவசாயிகள்

கிருஷ்ணராயபுரம், கிருஷ்ணராயபுரம் பகுதியில் மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட லாலாப்பேட்டை பஞ்சப்பட்டி, மாயனுார், மணவாசி, கிருஷ்ணராயபுரம், சிவாயம், பாப்பகாப்பட்டி, கருப்பத்துார், சேங்கல் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல், நேற்று வரை தொடர்ந்து மழை பெய்தது. மழை காரணமாக விவசாயிகள் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல், வாழை, வெற்றிலை பயிர்களுக்கு நீர் கிடைத்துள்ளது. மழையால் நெற் பயிர்கள் பசுமையாக வளர்ந்து வருகிறது. தற்போது, விவசாயிகள் நெற் பயிர்கள் விளைச்சலுக்கு உரம் தெளிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மானாவாரி நிலங்களில் கால்நடைகளுக்கு தேவையான சோளம் பயிர்கள் வளர்ந்து வருகிறது. இதன் மூலம் கால்நடைகளுக்கு பசு தீவனம் பிரச்னைக்கு தீர்வு கிடைத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை