உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கல்

உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கல்

அரவக்குறிச்சி : உடல் நலக்குறைவால் உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு, 25 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டது.திண்டுக்கல் மாவட்டம், பொன்மாந்துறை தெற்கு தெருவை சேர்ந்தவர் ஜேம்ஸ் மற்றும் ஆரோக்கிய ஜெயராணியின் மகன் அருள் பிரபுதாஸ், 39. இவர், கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் போலீஸ் ஸ்டேஷனில் முதல் நிலை காவலராக (கிரேட் ஒன்) பணியாற்றி வந்தார். இவர் தமிழ்நாடு காவல்துறையில், 2009ம் ஆண்டு பணியில் சேர்ந்துள்ளார். 15 ஆண்டுகளாக பணிபுரிந்தவர் கடந்த ஆண்டு டிச., 8ம் தேதியன்று உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார்.இந்நிலையில் அவரது குடும்பத்திற்கு, 2009ம் ஆண்டு காவல்துறை பணியில் சேர்ந்த, 4,787 காவலர்கள் ஒன்றிணைந்து, 24 லட்சத்து, 44 ஆயிரத்து, 914 ரூபாய் மதிப்புள்ள காசோலை வழங்கும் நிகழ்வு அரவக்குறிச்சியில் நேற்று நடைபெற்றது. அருள் பிரபுதாஸின் குடும்பத்தினரிடம், 25 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை