உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மகாதானபுரம் பஸ் ஸ்டாப்பில் ஹைமாஸ் விளக்கு ரிப்பேர்

மகாதானபுரம் பஸ் ஸ்டாப்பில் ஹைமாஸ் விளக்கு ரிப்பேர்

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த மகாதானபுரம் பஸ் ஸ்டாப், கரூர்-திருச்சி நெடுஞ்சாலை அருகே உள்ளது. இந்த பஸ் ஸ்டாப் வழியாக, கரூர், திருச்சி ஆகிய பகுதிகளுக்கு பயணிகள் சென்று வருகின்றனர். ஆள் நடமாட்டம் அதிகம் இருப்-பதால், பஸ் ஸ்டாப் பகுதியில், 'ஹைமாஸ்' விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் நல்ல வெளிச்சத்தால், பஸ் ஸ்டாப் பகுதிகளில் பொதுமக்கள் அச்சமின்றி சென்று வந்தனர். தற்போது, ஹைமாஸ் விளக்குகள் பழுதாகி கிடப்பாதல், பஸ் ஸ்டாப் பகுதிகளில் போதிய வெளிச்சமின்றி உள்ளதால், பஸ் பயணிகள் அச்-சத்துடன் நின்று செல்கின்றனர். அசம்பாவி-தத்தை தவிர்க்க, ஹைமாஸ் விளக்கை சரி செய்ய வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ