உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சர்வதேச ஆங்கில மொழி பயிற்சி ஆதிதிராவிடர் விண்ணப்பிக்கலாம்

சர்வதேச ஆங்கில மொழி பயிற்சி ஆதிதிராவிடர் விண்ணப்பிக்கலாம்

கரூர்: 'தாட்கோ' மூலம் ஆதிதிராவிடர், பழங்குடியினர், சர்வதேச ஆங்-கில மொழி பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:தமிழகத்தில், 'தாட்கோ' மூலம் ஆதிதிராவிடர், பழங்குடியினர் இளைஞர்களுக்கு ஆஸ்திரேலியா, அமெரிக்கா, கனடா, இங்கி-லாந்து, அயர்லாந்து, பிரான்ஸ், நியூசிலாந்து போன்ற முன்னணி வெளிநாட்டு பல்கலைகளில் இளங்கலை அல்லது முதுகலை பட்-டப்படிப்பு பயில அடிப்படையான சர்வதேச ஆங்கில மொழி சோதனை முறை தேர்விற்கான பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்ப-யிற்சி பெற, 18 முதல், 35 வயது நிரம்பிய, பிளஸ் 2 தேர்வு பெற்ற மாணவ, மாணவியர் விண்ணப்பிக்கலாம். குடும்ப வரு-மானம் ஆண்டிற்கு, மூன்று லட்சம் ரூபாயாக இருக்க வேண்டும். இப்பயிற்சியில் சேர, www.tahdco.comஎன்ற, 'தாட்கோ' இணைய தளத்தில் பதிவு செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை