உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அரசு மேல்நிலை பள்ளியில் போதை வாலிபர்கள் தகராறு

அரசு மேல்நிலை பள்ளியில் போதை வாலிபர்கள் தகராறு

கரூர்: வேலாயுதம்பாளையம் அருகே, விளையாட்டு போட்டி நடந்த பள்ளியில், போதை வாலிபர்கள் தகராறு செய்தனர்.கரூர் குறு வட்ட அளவிலான கோ-கோ வி ளையாட்டு போட்டி, வேலாயுதம்பாளையம் அருகே, நொய்யல் ஈ.வெ.ரா., அரசு மேல் நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. அப்போது, குடிபோதையில் இளைஞர்கள் சிலர் பள்ளிக்கு வந்துள்ளனர். அவர்கள், விளை-யாட்டு போட்டியில் ஈடுபட்ட, மாணவர்களை கிண்டலும், கேலியும் செய்து தகராறில் ஈடுபட்டனர்.இதுகுறித்து, மாவட்ட உடற்கல்வி அலுவலர் ஜெயலட்சுமி, வேலாயுதம்பாளையம் போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து, இரண்டு போலீசார் நொய்யல் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு வந்தனர். போலீசாரை பார்த்ததும், குடிபோதையில் இருந்த வாலிபர்கள், டூவீலரில் தப்பி சென்றனர். போலீசார் அவர்களை விரட்டி சென்ற போதும் பிடிக்க முடியவில்லை. இதனால், பள்ளியில், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ