உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கார்த்திகை தீப திருநாள் விழா மண் விளக்கு விற்பனை ஜோர்

கார்த்திகை தீப திருநாள் விழா மண் விளக்கு விற்பனை ஜோர்

கரூர், கார்த்திகை தீபத்திருநாளையொட்டி, கரூரில் மண் விளக்குகள் விற்பனை நேற்று ஜோராக நடந்தது. தமிழகம் முழுவதும் நாளை, கார்த்திகை தீபத்திருநாள் கொண்டாடப்பட உள்ளது. அதையொட்டி மாலையில் வீடுகள், வணிக நிறுவனங்கள், கோவில்களில் மண் விளக்குகளில் தீபம் ஏற்றப்படுவது வழக்கம். இதையடுத்து, நேற்று கரூர் ஜவஹர் பஜார், கோவை சாலை, உழவர் சந்தை, காந்தி கிராமம், தான்தோன்றிமலை, பசுபதிபாளையம், வெங்கமேடு உள்ளிட்ட, பல்வேறு பகுதிகளில் களிமண் விளக்குகள், பல வண்ணங்களில், சிலிகான் விளக்குகள் விற்பனை ஜோராக நடந்தது.குறைந்தபட்சம் ஒரு சிறிய விளக்கு, இரண்டு ரூபாய் முதல், ஐந்து ரூபாய் வரையிலும், பெரிய விளக்கு, 50 முதல், 100 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி