உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர் சிலவரி செய்திகள்...

கரூர் சிலவரி செய்திகள்...

வேங்காம்பட்டி கிராமத்தில்பகவதியம்மன் கோவில் விழாகிருஷ்ணராயபுரம்: வேங்காம்பட்டி கிராமத்தில், பகவதியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு சிறப்பு வழிபாடு பூஜை நடந்தது.கிருஷ்ணராயபுரம் அடுத்த, வேங்காம்பட்டி கிராமத்தில் பகவதியம்மன் கோவில் உள்ளது. திருவிழாவை முன்னிட்டு, பகவதியம்மனுக்கு மலர் மாலைகள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது. கிராம மக்கள் பொங்கல் வைத்தல், நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர். கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர்.புகழூரில் சுற்றுச்சூழல் தின உறுதிமொழியேற்பு நிகழ்ச்சிகரூர்: கரூர் மாவட்டம், புகழூர் தமிழ்நாடு செய்திதாள் காகித ஆலை நிறுவனத்தில், உலக சுற்றுச்சூழல் தின உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி நடந்தது.ஆலையின் முதன்மை பொதுமேலாளர் நாகராஜன் தலைமை வகித்தார். 'சுற்றுச்சூழலை பாதுகாப்போம்' என, பணியாளர்கள் உறுதிமொழியேற்றனர். சுற்றுச்சூழலை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு பதாகைகள் ஆலையில் வைக்கப்பட்டிருந்தன.நிகழ்ச்சியில், பொது மேலாளர் (மெக்கானிக்கல்) பிரின்ஸ் தொல்காப்பியன், பொது மேலாளர் (காகித உற்பத்தி) மகேஷ், துணை பொது மேலாளர் (பாதுகாப்பு, பாதுகாவலர்) ராதாகிருஷ்ணன், துணை பொதுமேலாளர் (வனம்) ஜெயக்குமார், துணை பொது மேலாளர் (ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு) சமீம் அகமத் உள்பட பலர் பங்கேற்றனர்.மாற்றுத்திறனாளிகளின்கழிப்பிடத்தை திறக்கணும்தான்தோன்றிமலை: கரூர் அருகே புலியூர் டவுன் பஞ்சாயத்து சார்பில், உப்பிடமங்களம் சாலையில் மாற்றுத்திறனாளிகளுக்கு என, சில ஆண்டுகளுக்கு முன் கழிப்பிடம் கட்டப்பட்டது. இந்நிலையில், கழிப்பிடம் பல மாதங்களாக மூடப்பட்டுள்ளது. சிதலம் அடையும் நிலையில் கழிப்பிடம் உள்ளது. எனவே, புலியூர் டவுன் பஞ்சாயத்து நிர்வாகம் கழிப்பிடத்தை உடனடியாக திறக்க, நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.பைக் திருட்டு இருவர் மீதுவழக்கு பதிவு; ஒருவர் கைதுகுளித்தலை: குளித்தலை நகராட்சி தெற்கு மணத்தட்டையை சேர்ந்தவர் பாபு, 30, கூலி தொழிலாளி. கடந்த, 6 மதியம், 2:30 மணியளவில் நடுவதியம் செந்தில்குமார் வீட்டின் முன்புறம், தனக்கு சொந்தமான பல்சர் பைக் நிறுத்தி விட்டு, கடைக்கு சென்று திரும்பி வந்து பார்த்தபோது, பைக்கை காணவில்லை.இதுகுறித்து பாபு கொடுத்த புகார்படி, குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து, திருச்சி மாவட்டம், பெட்டவாய்த்தலை தேவஸ்தானத்தை சேர்ந்த விஜய், 28, என்பவரை கைது செய்தனர். நடுவதியத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, 27, என்பவர் தலைமறைவாக உள்ளார்.குளித்தலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.பயனற்ற நிலையில் கழிவறைபொதுமக்கள் கடும் அவதிகரூர், ஜூன் 9-கரூர் அருகே, கழிப்பிடம் முட்புதர்கள் முளைத்து பயனற்ற நிலையில், சேதம் அடைந்துள்ளது. கரூர் மாநகராட்சி கருப்பம்பாளையம் சாலை, சுக்காலியூர் பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக, சில ஆண்டுகளுக்கு முன் பொது கழிப்பிடம் கட்டப்பட்டது. அதை அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், அந்த கழிப்பிடம் சில மாதங் களுக்கு முன் சேதம் அடைந்தது.மேலும், கழிப்பிடத்துக்குள் நுழைய முடியாதபடி அதிகளவில் முட்புதர்கள் முளைத்துள்ளன. எனவே, சுக்காலியூர் பகுதியில் உள்ள கழிப்பிடத்தை சீரமைத்து பொது மக்கள் பயன்பாட்டுக்கு விட, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.மது விற்றவர் கைதுஅரவக்குறிச்சி: தென்னிலை அருகே, சட்ட விரோதமாக மது விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, தென்னிலை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, கூனம்பட்டி பிரிவு சாலையில் குளித்தலை அருகே உள்ள கல்லையை சேர்ந்த கோபாலகிருஷ்ணன், 40, என்பவர் மது பாட்டில்களை சட்ட விரோதமாக விற்றுக் கொண்டிருந்தார். இதையடுத்து அவரை தென்னிலை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விற்பனைக்காக வைத்திருந்த, 1,000 ரூபாய் மதிப்புள்ள மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.முள் செடிகளை அகற்றநடவடிக்கை தேவைகிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த வேங்காம்பட்டி கிராமத்திற்கு, நுாலக சாலை வழியாக தார் சாலை பாலப்பட்டி பிரிவு வரை செல்கிறது. சாலையோர இடங்களில், அதிகமான முள் செடிகள் வளர்ந்து வருவதால், வாகன ஓட்டிகள் சாலை வழியாக செல்லும் போது பாதிப்படைகின்றனர். சமீபத்தில் பெய்த மழையால், முள் செடிகள் வளர்ந்து சாலையை ஆக்கிரமித்துள்ளது. மேலும் இரவு நேரங்களில் செல்லும் போது, வாகன ஓட்டுனர்கள் சிரமப்படுகின்றனர். எனவே, நுாலக சாலையில் வளர்ந்து வரும் முள் செடிகளை வெட்டி, அகற்றுவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை