உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ஆய்வக நுட்பனர் சங்கம் ஆர்ப்பாட்டம்

ஆய்வக நுட்பனர் சங்கம் ஆர்ப்பாட்டம்

கரூர், தமிழ்நாடு அரசு மருத்துவ ஆய்வக நுட்பனர் சங்கம், கரூர் மாவட்ட கிளை சார்பில், மாவட்ட தலைவர் மோகன்ராஜ் தலைமையில், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.அதில், தலைமை தொழில்நுட்ப அலுவலர் பதவியை இறுதி செய்து அரசாணை வெளியிட வேண்டும், பணி நியமன ஆணைகளில் உரிய திருத்தம் செய்ய வேண்டும், 1999ம் ஆண்டுக்கு பிறகு தொடங்கப்பட்ட மருத்துவக் கல்லுாரி, வட்ட, மாவட்ட மருத்துவமனைகளில் நிலை-1 பதவிகளை உருவாக்க வேண்டும், பரிசீலனையில் உள்ள கோப்புகளை இறுதி செய்து அரசாணை வெளியிட வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட துணைத்தலைவர் பிரசன்னகுமார், செயலாளர் முத்துமாரி, துணை செயலாளர் ஜமுனா ராணி, அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் அன்பழகன், பொன் ஜெயராம் உள்பட, பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை