உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பூட்டப்பட்ட மக்கள் காத்திருப்பு அறை தாலுகா அலுவலகம் வருவோர் அவதி

பூட்டப்பட்ட மக்கள் காத்திருப்பு அறை தாலுகா அலுவலகம் வருவோர் அவதி

கரூர்: கரூர் தாலுகா அலுவலகத்தில், பொதுமக்கள் காத்திருப்பு அறை பூட்டப்பட்டதால், பொது மக்கள் உட்கார முடியாமல் அவதிப்படுகின்றனர்.கரூர் தாலுகா அலுவலக வளாகத்தில், கிளை சிறை, இ-சேவை மையம், வட்ட வழங்கல் அலுவலகம், தீயணைப்பு நிலையம் உள்ளிட்ட, பல்வேறு அரசு துறை அலுவலகங்கள் உள்ளன. இதனால் பொதுமக்கள் வசதிக்காக, தாலுகா அலுவலக வளாகத்தில் காத்திருப்பு அறை கட்டப்பட்டுள்ளது. நாள்தோறும் பல்வேறு பணிகளுக்காக, பொதுமக்கள் தாலுகா அலுவலகம் வருகின்றனர்.ஆனால், இங்குள்ள காத்திருப்பு அறை பல மாதங்களாக பூட்டப்பட்டிருப்பதால், பொதுமக்கள் திறந்த வெளியில், கொளுத்தும் கோடை வெயிலில் தரையில் உட்காரும் அவல நிலை உள்ளது. மேலும், பலர் நீண்ட நேரம் தரையில் உட்கார முடியாமல் அருகில் உள்ள, கடைகளில் தஞ்சம் புகுகின்றனர். எனவே, தாலுகா அலுவலகம் செயல்படும் நாட்களில், பொதுமக்கள் காத்திருப்பு அறையை, வருவாய் துறை அதிகாரிகள் திறந்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர் பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை