மேலும் செய்திகள்
சாக்கடை கழிவுநீர் அகற்றும் பணி
15-Jul-2025
கிருஷ்ணராயபுரம், வயலுார் பஞ்சாயத்து பகுதியில் உள்ள, மழை நீர் சேமிப்பு குளத்தின் பராமரிப்பு பணிகளில், 100 நாள் திட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், வயலுார் பஞ்சாயத்துக்கு உட்பட்ட வயலுார், சரவணபுரம், குழந்தைப்பட்டி ஆகிய பகுதிகளில் மழை நீர் சேமிப்பு குளம் உள்ளது. மழை காலங்களில் வரும் மழைநீர் இங்குள்ள குளத்தில் சேமிக்கப்படுகிறது. இதன் மூலம் கிராமங்களில் உள்ள, விவசாய கிணறுகளுக்கு நீர்மட்டம் உயர்த்தப்படுகிறது.தற்போது சரவணபுரம், குழந்தைப்பட்டி பகுதிகளில் உள்ள மழை நீர் சேமிப்பு குளத்தில், அதிகளவு முள் செடிகள் வளர்ந்துள்ளது. இதையடுத்து முட்புதர்களை அகற்ற, பஞ்சாயத்தில் உள்ள நுாறு நாள் திட்ட தொழிலாளர்களை கொண்டு, பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது.
15-Jul-2025