உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மாசி மக சதுர்த்தி; நடராஜருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

மாசி மக சதுர்த்தி; நடராஜருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

குளித்தலை: குளித்தலை, கடம்பவனேஸ்வரர் கோவில் காவிரியின் தென் கரையில் குபேர திசை நோக்கி அமைய பெற்றதும், கண்ணுவ முனிவருக்கு கடம்ப மரத்தில் தோன்றி காட்சியளித்ததும், அப்பர் ஞானசம்பந்தரால் பாடல் பெற்ற திருத்தலமாகவும் அழைக்கப்படும் கடம்பவனேஸ்வரர் கோவிலில், நேற்று காலை மாசி மக சதுர்த்தியை முன்னிட்டு சிவகாமி உடனுறை நடராஜப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை விழா நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத விழா நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் தோன்றிய சிவகாமி அம்பிகை, நடராஜ பெருமான் ஆகியோர் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். தொடர்ந்து நடராஜ பெருமான், சிவகாமி அம்மன் அலங்கரிக்கப்பட்டு திருமுறைகள், சிவபுராணம், நடராஜப் பத்து முழங்க சோடச உபசாரங்கள் செய்யப்பட்டன. மங்கல இசை, ஆராதனை செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை