உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பஸ்களில் தமிழ்நாடு ஸ்டிக்கர் ஒட்டிய நா.த.க.,வினர் கைது

பஸ்களில் தமிழ்நாடு ஸ்டிக்கர் ஒட்டிய நா.த.க.,வினர் கைது

கரூர்: கரூரில் அரசு பஸ்களில், தமிழ்நாடு என பெயருடை ஸ்டிக்கர் ஒட்டிய, நாம் தமிழர் கட்சியினரை நேற்று போலீசார் கைது செய்-தனர்.தமிழகத்தில், எட்டு அரசு போக்குவரத்து கழகம் செயல்படுகி-றது. அதன் மூலம் இயக்கப்படும், அரசு பஸ்களின் முகப்பில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் என எழுதப்பட்டு இருந்-தது.இந்நிலையில் கடந்த ஜூலை மாத இறுதியில், அரசு பஸ்களில் இருந்த தமிழ்நாடு என்ற பெயர் நீக்கப்பட்டது. தமிழ்நாடு என்ற பெயர் நீக்கப்பட்டதை, எதிர்க்கட்சிகள் கண்டித்தன.ஆனால், பயணிகள் படிக்க வசதியாக தமிழ்நாடு பெயர் நீக்கப்-பட்டதாக, அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் விளக்கம் அளித் தனர். இந்நிலையில், நேற்று கரூர் பழைய பஸ் ஸ்டாண்டில், அரசு பஸ்களுக்கு தமிழ்நாடு என ஸ்டிக்கர் ஒட்டப்-படும் என, நாம் தமிழர் கட்சியினர் அறிவிப்பு வெளியிட்டனர்.இதையடுத்து, கரூர் பழைய பஸ் ஸ்டாண்டில் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொ) அருள் பிரகாஷ் தலைமையில், 25க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர். அப்-போது, கரூர் மண்டல நா.த.க., செயலா ளர் ராஜேஷ் கண்ணன் தலைமையில், அக்கட்சியினர் கரூர் பழைய பஸ் ஸ்டாண்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, அரசு பஸ்களுக்கு, தமிழ்நாடு என்ற ஸ்டிக்கரை ஒட்டினர். இதையடுத்து, மாநில நா.த.க., மருத்துவ அணி செயலாளர் கருப்பையா உள்பட, 10 பேரை கரூர் டவுன் போலீசார் கைது செய்தனர்.பிறகு, அரசு பஸ்களில் ஒட்டப்பட்டிருந்த, தமிழ்நாடு என்ற ஸ்டிக்கரை போலீசார் அகற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை