மகிளிப்பட்டி கிராமத்தில்வேட்டி, சேலை வழங்கல்மகிளிப்பட்டி கிராமத்தில், இலவச வேட்டி, சேலை வழங்கும் பணி நடந்தது.கிருஷ்ணராயபுரம் அடுத்த, சிந்தலவாடி பஞ்சாயத்து மகிளிப்பட்டி கிராமத்தில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு அரசு சார்பில் மக்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கும் பணி நடந்தது. ரேஷன் கடைகள் மூலம், 200 கார்டுதாரர்களுக்கு வேட்டி, சேலை வழங்கப்பட்டது. பொங்கல் தொகுப்புடன் வேட்டி, சேலை வழங்கப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியுடன் பெற்று கொண்டனர்.சட்ட விரோத மது விற்பனை49 பாட்டில்கள் பறிமுதல்கரூர் மாவட்டத்தில், சட்ட விரோதமாக விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த, 49 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.கரூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஷியா சுரேஷ் உள்ளிட்ட, போலீசார் நேற்று முன்தினம் மாவட்டம் முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சட்ட விரோதமாக விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த, 49 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், மதுபாட்டில்களை விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்ததாக சொர்ணா சேகர், 31; ரமேஷ், 25; மனோகர், 31; பாலகிருஷ்ணன், 41; சுரேஷ் குமார், 39; மணிமுத்து, 29; உள்பட, ஆறு பேரை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கைது செய்தனர்.கிருஷ்ணராயபுரம் பகுதியில் பூக்கள் விலை உயர்வுகிருஷ்ணராயபுரம் பகுதிகளில், பூக்கள் விலை உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மகிளிப்பட்டி, மாயனுார், காட்டூர், செக்கணம், எழுதியாம்பட்டி ஆகிய கிராமங்களில் விவசாயிகள் பரவலாக பூக்கள் சாகுபடி செய்து வருகின்றனர். இதில் விரிச்சிப்பூக்கள், செண்டுமல்லி பூக்கள், சின்னரோஜா ஆகிய பூக்கள் சாகுபடி நடக்கிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சின்ன ரோஜா கிலோ, 100 ரூபாயில் இருந்து, 200 ரூபாய், விரிச்சிப்பூக்கள், 90 ரூபாயில் இருந்து, 150 ரூபாய், செண்டுமல்லி, 50 ரூபாயில் இருந்து 70 ரூபாய்க்கு விற்கப்பட்டது.சந்தையூர் வார சந்தையில்ஆடு, கோழி விற்பனைசந்தையூர் வாரச்சந்தையில் ஆடு, கோழிகள் விற்பனை தீவிரமாக நடந்தது.கிருஷ்ணராயபுரம் அடுத்த, இரும்பூதிப்பட்டி சந்தையூர் வாரச்சந்தை சனிக்கிழமை தோறும் செயல்படுகிறது. நேற்று சந்தையில் காய்கறிகள், ஆடு, கோழிகள் விற்கப்பட்டன. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆடு, கோழிகள், விற்பனை அதிகமாக இருந்தது. 8 கிலோ ஆடு ஒன்று 5,500 ரூபாய், நாட்டு கோழி கிலோ, 400 ரூபாய்க்கு விற்பனையானது. உள்ளூர், வெளியூர் வியாபாரிகள் வாங்கி சென்றனர்.வாய்க்கால் பாலத்தில் பாதிப்புசரி செய்த சாலை பணியாளர்கள்குளித்தலை சுங்ககேட் அருகில், கரூர் - திருச்சி நெடுஞ்சாலையில் தென்கரை பாசன வாய்க்காலில் இருந்து, தேவதானம் பகுதியில் உள்ள விவசாய நிலத்திற்கு பாசன தண்ணீர் நெடுஞ்சாலை வழியாக செல்கிறது. நெடுஞ்சாலையில் போடப்பட்ட பாலத்தில் பாதிப்பு ஏற்பட்டு ஓட்டை ஏற்பட்டது. இதனால் வாகனங்களில் செல்வோர் அச்சப்பட்டனர். நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் செந்தில்குமரன் பாலத்தை பார்வையிட்டார். பின், நெடுஞ்சாலை துறை ஆர்.ஐ., சேகர் தலைமையில், சாலை பணியாளர்கள் நெடுஞ்சாலை உள்ள பாலத்தில் ஏற்பட்ட ஓட்டையை ஜல்லி கற்கள் மூலம் தார் ஊற்றி, ஓட்டை சரி செய்யப்பட்டது.டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு மூன்று நாட்களுக்கு விடுமுறைகரூர் மாவட்டத்தில், மூன்று நாட்களுக்கு டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு, விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:திருவள்ளுவர் தினமான வரும், 16, வடலுார் ராமலிங்கம் நினைவு நாளான வரும், 25 மற்றும் குடியரசு தினமான, 26 ஆகிய மூன்று நாட்களில், டாஸ்மாக் மதுபான கடைகள், மதுபான கூடங்கள் மற்றும் உரிமம் பெற்ற ஓட்டல் பார்களில், மதுபானம் விற்க கூடாது. விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.இந்த நாட்களில், விதிகளை மீறி மதுபானங்களை விற்பனை செய்யும் டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் பார் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு தெரிவித்துள்ளார்.மேம்பால சுவர்களில்முளைத்துள்ள செடிகள்கரூர் அருகே, தேசிய நெடுஞ்சாலை மேம் பால சுவர்களில், மரம் மற்றும் செடிகள் முளைத்துள்ளன. இதனால், சுவர்கள் சேதம் அடையும் அபா யம் உள்ளது.கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலைகளில் பல்வேறு, கிராம சாலைகளை இணைக்கும் வகையில், மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. குறிப்பாக, தோரணகல்பட்டி, ஏமூர், புலியூர் உள்ளிட்ட இடங்களில் மேம்பாலங்கள் உள்ளன. இந்நிலையில், கடந்த இரண்டு மாதங்களாக பெய்த மழை காரணமாக, பெரும் பாலான இடங்களில் மேம்பால சுவர்களில் மரங்கள், செடிகள் அதிகளவில் முளைத்துள்ளன.இதனால், மேம்பாலங்களின் சுவர்கள் சேதம் அடையும் அபாயம் உள்ளது. எனவே, மேம் பால சுவர்களில் முளைத்துள்ள மரங்கள் மற்றும் செடிகளை உடனடியாக அகற்ற, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், நடவடிக்கை எடுக்க வேண்டும்.பயனற்ற நிலையில்கழிப்பிடம்:மக்கள் கடும் அவதிகரூர் அருகே, பொது கழிப்பிடம் முட்புதர்கள் முளைத்து பயனற்ற நிலையில், சேதம் அடைந்துள்ளது. இதனால், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.கரூர் அருகே சுக்காலியூர் காமராஜ் நகரில், பொதுமக்கள் பயன்பாட்டுக்காக, சில ஆண்டுகளுக்கு முன் பொது கழிப்பிடம் கட்டப்பட்டது. அதை, அந்த பகுதியை சேர்ந்த மக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு சேதம் அடைந்தது. மேலும், கழிப்பிடத்துக்குள் நுழைய முடியாதபடி அதிகளவில் முட்புதர்கள் முளைத்துள்ளன. இதனால், கழிப்பிடத்தை பயன்படுத்த முடியாமல், திறந்த வெளியை பயன்படுத்தி வருகின்றனர்.இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே, சேதமடைந்து முட்புதர்களால் சூழப்பட்டுள்ள, கழிப்பிடத்தை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விட, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.கோழி குஞ்சுகளைவிழுங்கிய பாம்பு சிக்கியதுஅரவக்குறிச்சி அடுத்த பள்ளப்பட்டியில் வசித்து வருபவர் மன்சூர். இவர் தனது வீட்டின் அருகே கோழிகளை வளர்த்து வருகிறார். வழக்கம் போல நேற்று முன்தினம் இரவு, கோழிகளை கூடையில் அடைத்து வைத்து விட்டு, காலை திறந்து பார்த்தபோது, ஐந்து அடி நீளமுள்ள பாம்பு ஒன்று கூடையில் இருந்த, ஐந்து கோழி குஞ்சுகளை விழுங்கி விட்டு நகர முடியாமல் நெளிந்து கொண்டிருந்தது. இதை பார்த்த மன்சூர், பாம்பை லாவகமாக பிடித்து ஒரு சாக்கு பைக்குள் கட்டி எடுத்துச் சென்று வனப்பகுதிக்குள் விடுவித்தார். தீயணைப்பு வீரர்கள் உதவி இல்லாமல் பாம்பை லாவகமாக பிடித்து, வனப்பகுதிக்குள் விட்ட மன்சூருக்கு பாராட்டுகள் குவிகிறது.நொய்யல் குறுக்கு பிரிவு சாலையில்பஸ்கள் நின்று செல்ல கோரிக்கைகரூர் மாவட்டம், நொய்யல் குறுக்கு பிரிவு சாலையில் பயணிகள் நிழற்கூடம் கட்டப்பட்டுள்ளது. இந்த இடத்தில் பஸ்கள் நிற்பதில்லை. ஈரோடு, கரூர் செல்லும் நெடுஞ்சாலை ஓரத்தில் பஸ்கள் நின்று செல்வதால், அங்கு சென்று பொதுமக்கள் ஏறி பயணம் செல்கின்றனர். இதன் காரணமாக காலியாக உள்ள நிழற்கூடத்துக்குள், குடிமகன்கள் அமர்ந்து மது குடித்துவிட்டு பாட்டில்களை அங்கேயே உடைத்து விட்டு செல்கின்றனர். மேலும், இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் கூடாரமாக இப்பகுதி காணப்படுகிறது.சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, பயணிகள் நிழற்கூடம் அருகில் அனைத்து பஸ்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.இல்லம் தேடி கல்வி சார்பில் பொங்கல் விழாகுமாரபாளையத்தில், கலைமகள் வீதியில் செயல்பட்டு வரும் இல்லம் தேடி கல்வி மையம், விடியல் ஆரம்பம் சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. மாணவ, மாணவியர் பலர் பாரம்பரிய உடையில் பங்கேற்றனர். பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விடியல் பிரகாஷ் பரிசு வழங்கினார். தன்னார்வலர்கள் ராணி, சித்ரா, நிர்வாகிகள் பஞ்சாலை சண்முகம், தீனா உள்பட பலர் பங்கேற்றனர்.லாரி மோதியதில்முதியவர் பலிகரூர் மாவட்டம், என்.வெங்கிடாபுரம் பகுதியை சேர்ந்தவர் கருப்பண்ணன், 80; இவர் கடந்த, 11ல் சைக்கிளில், க.பரமத்தி அருகே நெடுங்கனுார் பகுதியில் சென்று கொண்டிருந்தார்.அப்போது, திருச்சி மணப்பாறையை சேர்ந்த ராஜகோபால், 49; ஓட்டி சென்ற டாரஸ் லாரி, கருப்பண்ணன் மீது மோதியது. அதில், படுகாயம் அடைந்த கருப்பண்ணன், கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை யில் நேற்று முன்தினம் உயிரிழந்தார். க.பரமத்தி போலீசார் விசாரிக்கின்றனர்.ஆத்துப்பாளையம் அணைகூடுதல் தண்ணீர் திறப்புஆத்துப்பாளையம் அணையில் இருந்து, வாய்க்காலில் நேற்று கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது.கரூர் மாவட்டம், கார்வழி ஆத்துப்பாளையம் அணையில் இருந்து, பாசனத்துக்காக நொய்யல் வாய்க்காலில் கடந்த, 3 ல் தண்ணீர் திறக்கப்பட்டது. முதல் கட்டமாக வினாடிக்கு, 60 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி தண்ணீர் திறப்பு வினாடிக்கு, 110 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.அணைக்கு வினாடிக்கு, 6 கன அடி தண்ணீர் வந்தது. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 20.69 கன அடியாக இருந்தது.