உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அவசர பராமரிப்பு பணிக்காக நொய்யல் ரயில்வே கேட் இன்றும், நாளையும் மூடல்

அவசர பராமரிப்பு பணிக்காக நொய்யல் ரயில்வே கேட் இன்றும், நாளையும் மூடல்

கரூர்: நொய்யல் ரயில்வே கேட் அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக, இன்றும் (23), நாளையும் மூடப்படுகிறது.கரூர்-ஈரோடு ரயில்வே வழித்தடத்தில், நொய்யல் ரயில்வே கேட் உள்ளது. அதன் வழி-யாக திருப்பூர், நாமக்கல் கோவை, ஈரோடு, சேலம், அரவக்குறிச்சி, க.பரமத்தி உள்ளிட்ட பகுதிகளுக்கு வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில், பராமரிப்பு பணிகள் காரணமாக நொய்யல் ரயில்வே கேட் இன்று காலை, 8:00 மணி முதல், நாளை மாலை, 6:00 மணி வரை மூடப்படுகிறது. இதனால், வாகனங்கள் நொய்யல் குறுக்கு சாலையில் இருந்து, காகித ஆலை, வேலாயுதம்பாளையம் வழியாக பரமத்தி வேலுார், நாமக்கல், திருச்செங்கோடு, சேலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டும். அதேபோல், அந்த பகுதியில் இருந்து வரும் வாக-னங்கள், வேலாயுதம்பாளையம், காகித ஆலை, நொய்யல் குறுக்கு சாலை வழியாக அரவக்கு-றிச்சி, க.பரமத்தி, திருப்பூர், ஈரோடு கோவை பகு-திகளுக்கு செல்ல வேண்டும்.இத்தகவலை, புகழூர் ரயில்வே ஸ்டேஷன் நிர்-வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை