உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கிரிவல பாதையில் பேவர் பிளாக் தேவை

கிரிவல பாதையில் பேவர் பிளாக் தேவை

குளித்தலை: குளித்தலை அடுத்த சத்தியமங்கலம் பஞ்., அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவில் அடிவாரம், 3 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள், மலையை சுற்றி உள்ள தார் சாலையில் நடந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும், பவுர்ணமி கிரிவலம் அன்று பக்தர்கள் மலையை சுற்றி நடந்து செல்கின்றனர். மேலும், தினசரி காலை, மாலையில் சுற்றுப்பகுதி பொதுமக்கள், இளைஞர்கள் நடைப்பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். மலைப்பாதையில் உள்ள தார்ச்சாலையில் ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளதால், பேவர் பிளாக் அமைக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ