உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சாலையில் நடந்து சென்றவர் தனியார் பஸ் மோதி பலி

சாலையில் நடந்து சென்றவர் தனியார் பஸ் மோதி பலி

கரூர்: கரூர் அருகே, தனியார் பஸ் மோதிய விபத்தில், நடந்து சென்-றவர் உயிரிழந்தார்.கரூர் மாவட்டம், கடவூர் கொசூர் பகுதியை சேர்ந்தவர் கருப்-பையா, 45. இவர் கடந்த, 23 இரவு, கரூர்-மணப்பாறை சாலை கருணாலிய கவுண்டனுார் பகுதியில், நடந்து சென்று கொண்டி-ருந்தார். அப்போது, அந்த வழியாக கரூர் ஜெகதாபியை சேர்ந்த ராஜேந்திரன், 62, என்பவர் ஓட்டி சென்ற தனியார் பஸ், கருப்-பையா மீது மோதியது. அதில், தலையில் பலத்த காயமடைந்த கருப்பையா, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இதுகுறித்து, கருப்பையா மனைவி அமுதா, 35, அளித்த புகார்-படி, வெள்ளியணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா-ரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை