உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கார் மோதிய விபத்தில் நடந்து சென்றவர் பலி

கார் மோதிய விபத்தில் நடந்து சென்றவர் பலி

கரூர்: கரூர் அருகே, கார் மோதிய விபத்தில் நடந்து சென்றவர் உயிரிழந்தார்.கரூர் மாவட்டம், பெரியகோதுார் என்.எஸ்.பி., நகரை சேர்ந்தவர் மோகன், 54; இவர், நேற்று முன்தினம் கரூர்-சேலம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக சென்ற ஆல்டோ கார், மோகன் மீது மோதியது. அதில், படுகாயம் அடைந்த மோகன், கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து, மோகனின் மகன் அருண்குமார், 34, கொத்த புகார்படி, வெங்கமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி