உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / செங்குத்தான மயான பாதை சரி செய்ய மக்கள் கோரிக்கை

செங்குத்தான மயான பாதை சரி செய்ய மக்கள் கோரிக்கை

குளித்தலை, குளித்தலை அடுத்த மருதுார் டவுன் பஞ்., மருதுார் காவிரி படுகையில், பொது சமத்துவ மயானம் கடந்த, 70 ஆண்டுகளுக்கு மேலாக பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது. மருதுார், மேட்டுமருதுார், கூடலுார், வீரம்பூர், ராஜேந்திரம், பட்டவர்த்தி பகுதி மக்கள் இந்த மயானத்தை பயன்படுத்தி வருகின்றனர்.திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் காவிரி படுகையில் மயானம் அமைந்துள்ளது. பொதுமக்கள் பிரேதத்தை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேர், ஆம்புலன்ஸ் மற்றும் துாக்கி வரும் போது, தேசிய நெடுஞ்சாலையில் இருந்து செங்குத்தாக உள்ள மண் சாலை குண்டும் குழியுமாக இருப்பதால், பிரேதத்தை மயானத்தில் அடக்கம் செய்வதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே மயான பாதையை ஆய்வு செய்து, அனைவரும் செல்லும் வகையில் சாலை அமைத்து தர வேண்டும் என, இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ