உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / லோக்சபா தேர்தல் புறக்கணிக்க உழைக்கும் மக்கள் விடுதலை கழகம் முடிவு

லோக்சபா தேர்தல் புறக்கணிக்க உழைக்கும் மக்கள் விடுதலை கழகம் முடிவு

கரூர்: '' வரும் லோக்சபா தேர்தலை புறக்கணிக்க போகிறோம்,'' என, உழைக்கும் மக்கள் விடுதலை கழக தலைவர் தேக்கமலை தெரிவித்துள்ளார்.கரூர் அருகே, காந்தி கிராமத்தில் உழைக்கும் மக்கள் விடுதலை கழகத்தின், மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. நிறுவன தலைவர் தேக்கமலை நிருபர்களிடம் கூறியதாவது:தமிழகத்தில், 50 லட்சம் போயர் இன மக்கள் உள்ளனர். கட்டுமானம், விவசாயம், கல் உடைக்கும் தொழிலில் ஈடுபடுகின்றனர். பல ஆண்டுகளாக போயர் நல வாரியம், கல்லுடைக்கும் தொழிலாளர் நலவாரியம் அமைக்க வேண்டும், கட்டுமான தொழிலாளர் நல வாரிய தலைவர் பதவியை, போயர் சமுதாய மக்கள் பிரதிநிதிக்கு வழங்க வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறோம்.ஆனால், தேர்தல் நேரங்களில், போயர் சமுதாய ஓட்டுக்களை பெற, கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக கூறும், தி.மு.க.,- அ.தி.மு.க., கட்சிகள் பிறகு, அதை கண்டு கொள்வது இல்லை. இதனால், தமிழகத்தில் உள்ள, 50 லட்சம் போயர் சமுதாய மக்கள் வரும், லோக்சபா தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம்.இவ்வாறு தெரிவித்தார். அப்போது, மாநில பொதுச்செயலாளர் பாலமுருகன், பொருளாளர் காமராஜ் உள்ளிட்ட, நிர்வாகிகள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை