உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சிறுமியை திருமணம் செய்த டிரைவர் உள்பட 8 பேர் மீது போக்சோ

சிறுமியை திருமணம் செய்த டிரைவர் உள்பட 8 பேர் மீது போக்சோ

கரூர்: கரூர் அருகே, சிறுமி கடத்தி சென்று திருமணம் செய்து கொண்ட டிரைவர் உள்பட, எட்டு பேர் மீது, போக்சோ சட்-டத்தின் கீழ், மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.கரூர் மாவட்டம், பசுபதிபாளையம் பகுதியை சேர்ந்தவர் கோபிநாத், 26; டிரைவர். இவர் கடந்த ஜூன், 26ல் கரூர் - கோவை சாலையை சேர்ந்த, 16 வயது சிறுமியை கடத்தி சென்று, க.பரமத்தி பாலமலை பாலசுப்பிரமணி சுவாமி கோவிலில் திரு-மணம் செய்து கொண்டார். தொடர்ணந்து சிறுமிக்கு கோபிநாத் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.இதுகுறித்து, தான்தோன்றிமலை பஞ்., யூனியன் கிராமநல அலு-வலர் விஜயா, 54, மகளிர் போலீசில் புகார் செய்தார். சிறுமியை திருமணம் செய்த கோபிநாத், உடந்தையாக இருந்த கோபி-நாத்தின் தாய் கலா, சகோதரர் ஜெகநாத், உறவினர்கள் சரிதா, ரகமத் பீவீ நிஷா, சேகர், பானு, சதீஷ் ஆகிய எட்டு பேர் மீது, கரூர் மகளிர் போலீசார்,ல போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை