பட்டாசு கடை உரிமையாளர்களுடன் போலீசார் ஆலோசனை கூட்டம்
குளித்தலை, குளித்தலையில், துணை டி.எஸ்.பி., அலுவலக எல்லைக்குட்பட்ட, தீபாவளி திருநாளை ஒட்டி நிரந்தர மற்றும் தற்காலிகமாக பட்டாசு கடை நடத்தும் அனுமதி பெற்றுள்ள கடை உரிமையாளர்களுடன், போலீசார் ஆலோசனை நடத்தினர். குளித்தலை எஸ்.ஐ., சரவணகிரி தலைமை வகித்தார். தீபாவளி திருநாளை சிறப்பாக பொதுமக்கள் கொண்டாடும் வகையில், அனுமதி பெற்றுள்ள பட்டாசு கடை உரிமையாளர்கள், அரசு வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி கடைகளை நடத்த வேண்டும். தீ பரவுவதை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். அரசால் தடை செய்யப்பட்ட பட்டாசுகளை விற்பனை செய்யக் கூடாது. விதிமுறைக்கு மாறாக கடை உரிமையாளர்கள் நடந்து கொள்ளாமல், பட்டாசுகளை விற்பனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.எஸ்.ஐ.,க்கள் ரத்தினகிரி, செல்வகுமார் மற்றும் லாலாபேட்டை, மாயனுார், தோகைமலை, நங்கவரம், சிந்தாமணிப்பட்டி, பாலவிடுதி போலீசார் மற்றும் பட்டாசு கடை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.